Sunday, July 11, 2010

OSHO

ஓஷோவை பற்றி சில துளி.......


ஓஷோ நகைச்சுவை உணர்வு புரட்சி சிந்தனையும் நம்மை விட மேம்பட்டதன்மையை கொண்டவர். அவர் இளமையில் நடந்த ஒரு சுவையான நிகழ்வு.

"ஓஷோ சிறு வயதில் இருக்கும் போது அவர் இருக்கும் ஊரில் ஒரு பிரபலமானசாமியார் ஒருவர் இருந்தார். வயதானவர் எல்லோருக்கும் ஆசி வழுங்குவதுதான்அவர் வேலை
அப்பொழுது ஓஷோ வீட்டில் உள்ளோர் அனைவரும் அவரிடம்சென்று ஆசி பெற செல்ல ஓஷோவியும் அழைத்து சென்றனர். ஓஷோவை கூ ப்பிட்டு அவரிடம் காலில் விழுந்து ஆசி வாங்க சொன்னார்கள். ஆனால்ஓஷோ மறுத்தார்.

"நான் ஏன் அவரிடம் காலில் விழுந்து வணங்கவேண்டும். என்று பாட்டியை
பார்த்து கேட்டார்". அதற்க்கு பாட்டி சொன்னார். "அவர் உன்னை விட வயதில்முத்தவர் பெரியவர் அவர் காலில் விழுந்து வணங்கினால் நல்லது" என்றார். ஆனால் ஓஷோ அதற்கு "நம் வீட்டின் எதிரே ஒரு யானை உள்ளதே அதுஇவரைவிட வயதானதே அப்ப ஏன் அது காலில் விழுந்து வணங்கமாட்டங்கரங்க" என்று கேட்டார் பாட்டி பதில் ஏதும் சொல்லமுடியவில்லை.

ஓஷோ
இளைமைலே புரட்சி சிந்தனை உள்ளவராக இருந்தார்.



ஓஷோ பிறக்கவும் இல்லை. இறக்கவும் இல்லை.

இப்பதிவை முன்னெடுத்து செல்ல உதவுங்கள். உங்கள் ஓட்டுகளாக......



புகையினால் ஏற்படும் உடல் நல கேடு


புகையினால் ஏற்படும் உடல் நல கேடு

சிகரெட் புகையினால் 4000 மேலான வேதியல் பொருட்கள் உள்ளன. இவற்றில் 50க்கும் மேலானவை புற்றுநோய் உருவாவதற்கு காரணமான (carcinogen) வேதி பொருள்கள் உள்ளன. இவற்றில் முக்கியமான பொருள் நிக்கோடின். இது சற்றளவு மூளையை சுறுசுறுப்படைய செய்தாலும் தொடர்ந்து புகைப்பிடிப்பவருக்கு அது நிறுத்தும் போது ரத்தத்தில் நிகோடின் அளவை குறைத்து பதட்டம், தலைவலி, எரிச்சல் அடைதல், முனைந்து செயல்படும் திறன் குறைதல் மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகள் உண்டாகும். இவை அடுத்த சிகரெட் பிடிக்கும் போது குறைந்து விடும். அதனால் புகைப்பழக்கம் உள்ளவர்கள் இந்த சுழற்சியிலிருந்து மீள முடியாமல் அவதிப்படுவர். அடிமையாவர். நிகோடின் தவிர புகையில் உள்ள கார்பன் மோனக்ச்சிட் என்ற வேதி பொருட்கள் பிராணவாயு உடலின் எடுத்து செல்லும் திறனை பாதிக்கிறது.


புகையினால் ஏற்படும் நோய்கள்

புற்றுநோய், ரத்த புற்றுநோய், உயர்ந்த ரத்த அழுத்தம் ரத்த குழாய் அடைப்பு, பக்கவாதம், முச்சு குழாய் இறுக்கம், ஆஸ்துமா, நுரையீரல் நோய் கிருமிகள் தாக்கம், காச நோய், மூக்கிலிருந்து சளி மற்றும் நீர் வடிதல், வயது முதிர்ச்சி, முகசுருக்கம், மலட்டு தன்மை, கண்ணில் குறைவிழுதல், பல், ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள். 10 ல் 8 பேருக்கு புகைப்பிடித்தல் நேரடி காரணமாக உள்ளது. புகையினால் மெல்லும் பழக்கம் உள்ளவருக்கு வாய் உட்புறம், மூக்கு, தொண்டை, உணவுகுழாய், இறைப்பை, கணையம், பித்த நீர் குழாய், சீறுநீர் பை, சீறுநீரகம் இவற்றில் புற்று நோயும், ரத்த புற்று நோயும் வர வாய்ப்பு அதிகம் ஆயுளில் 10 வருடம் அதற்கு மேற்பட்ட ஆயுள் குறைகிறது.

புகைபழக்கம் இல்லாதவர் இப்பழக்கம் உள்ளவரிடம் இருக்கும் போது (ஒரு நாளைக்கு இரண்டு பாக்கெட் பிடித்தால்) புகைக்காத நபர் அவரை அறியாமலே மூன்று சிகரெட் புகைக்கிறார். இது அவரின் சீறுநீரில் உள்ள நிகோடின் அளவு கொண்டு கணிக்கப்பட்டது.


புகை பழக்கத்தினால் ஏற்படும் சமுக பிரச்சனைகள்

1 . மூச்சு காற்று உடை, தோல் அனைத்திலும் புகையிலை விஷம்.
2 . தூசி மற்றும் நுகர்தல் குறைந்து உணவை ருசிக்கும் தன்மை குறைதல்.
3 . பணவிரயம்.
4 . அடிகடி பணியிளிருந்து விடுப்பு.
5 . மற்ற குடும்ப உறுப்பினர், நட்பு இவற்றில் பதிப்பு.


புகைப்பழக்கம் நிறுத்தினால் ஏற்படும் பலன்


12 மணி நேரத்தில் சுவாசம் சுலபமாகிறது.
1
மாதத்தில் தோலில் ரத்தம் சீராக தோல் பலப்பாகிறது.
3 ளிருந்து 4 மாதம் இருமல் மூச்சு இறைப்பு குறைகிறது.
நுரையீரல் திறன் 10 % குறைகிறது.
1 வருடம் நுரையீரல் புற்றுநோய் பாதிக்க்கூடிய வாய்ப்பு பாதியாக குறைகிறது.
15 வருடம் மாரடைப்பு வரும் வாய்ப்பு வேகமாக குறைகிறது.

உலக சுகாதார அமைப்பின் பொது செயலாளர் டாக்டர். மார்க்கரெட் ஜான் கூறுகிறார் "இந்த நுற்றாண்டின் சுமார் 100 கோடி பேர் பலியாவார்கள்" என்று. புகையினால் தயாரிப்புகளுக்கு விதிக்கப்படும் வரிகள் முலம் உலக நாடுகளுக்கு ஆண்டுதோறும் ரூபாய் 8 லட்சம் கோடிக்கும் அதிகமான வருவாய் கிடைத்தாலும் அதில் ஒரு சதவிதத்துக்கும் குறைவான பணமே புகையிலை கட்டுபாட்டுக்காக பயன்படுத்தபடுகிறது.

"புகை பிடிப்பதன் முலம் இந்தியாவில் 10 லட்சம் பேர் ஆண்டிற்கு உயிர் இழக்கின்றனர்" என்று முன்னால் சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறினார்


புகைபழக்கத்தை நிறுத்துவது எப்படி

இப்பழக்கம் உள்ளவர்கள் 3 ல் 2 பேர் அதை விட்டுவிட விரும்புகின்றனர். மனதிடம், தீர்மானம் ஆகியவை முக்கியம்
எப்பொழுது எல்லாம் புகையினால் நினைவு வருகிறதோ அப்பொழுது உட்கார்ந்து அல்லது படுத்த நிலையில் மூச்சினை நன்கு இழுத்து விட முயற்சியுங்கள். உங்கள் குழைந்தைகளை பற்றி சிந்தியுங்கள். உங்களுக்கு உதவும் நபரை கண்டறியுங்கள்.
நன்றாக குடிநீர் அருந்துங்கள். ஆரோக்கியமான உணவினை உட்கொல்லுங்கள் .


100 கோடி பேர்களின் மரணம் நம் கைகளில் உள்ளது. இன்றே வீசிஎறிவோம்.

நாத்திகம் எனபது என்ன........?

நாத்திகம் என்ற வார்த்தை பெரியார் காலத்தில் இருந்தே எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்னே சித்தர்கள் காலத்திலே இவை மக்களிடம் பாடல்களாக சொல்லப்பட்டன. அறிவியல் வளர்ச்சி போதிய அளவில் இல்லாத நிலையில் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள நினைக்கவில்லை. ஆனால் பெரியார் வந்து நாத்திகத்தை தீவறமாக்கினார் அவரை பின்பற்றுபவர்கள் இதை முன் முன்னேடுத்து செல்கின்றனர்... உண்மையில் நாத்திகம் எனபது என்ன? ஆத்திகத்திர்க்கு எதிர்மரைதானே ஒன்று இருந்தால் தானே ஒன்று உயிர்யுடன் இருக்கும் ஒன்று இல்லை என்றால் இன்னொன்றுக்கு வேலை இல்லைதானே..? ரஷ்யாவில் நாத்திகத்திற்கு வேலை இல்லை ஏன்யென்றால் அங்கே யாரும் கடவுள் இல்லை என்கின்றனர். காம்யுனிசம் கொள்கையில் உள்ளவர்கள். அங்கே எப்படி நாத்திகம் புகுத்தமுடியும். ஆத்திகத்திர்க்கு தான் அங்கே வேலை இருக்கிறது.

ஓஷோ, கதை ஒன்று சொல்வார். "ஒரு கிருஸ்துவ பாதிரியார் வேகமாக நடந்து கொண்டுஇருகின்றார் அப்போது பாதிரியாரை ஒரு ஆள் தடுத்து நிறுத்துகிறார். "என்னை ஏன் தடுகின்றிர்கள்" என்று கேட்க அதற்கு அந்த ஆள் "எதற்கு வேகமாக போகின்றிர்கள்" என்று கேட்க. பாதிரியார், "எனக்கு பிரசங்கம் பண்ண நேரம் ஆகிவிட்டது தடுக்காதே வழியை விடு" என்றார். அதற்கு அந்த ஆள் "யாரை எதிர்த்து பிரசங்கம் பண்ண போறிங்க" என்று கேட்க அதற்கு அவர் சாத்தனை எதிர்த்துதானே பிரசங்கம் பன்னபோறேன் கடவுளின் எதிரி சாத்தான் தான் அது அழியவேண்டும்" ஆமாம், நீயார் என்றார். அதற்கு அந்த ஆள் நீ அழியவேண்டும் என்கிறாயே அந்த சாத்தான் நான்தான் என்றது. அவருக்கு பயங்கற கோவம் நான் யாரை அழியவேண்டும் என்று சொல்கிறேனே அந்த சாத்தான் நீ தானா இன்றே ஆண்டவன் மேல் ஆணை இட்டு சொல்கிறேன் நீ அழித்துபோவையாக" என்றார். அதற்கு அந்த சாத்தான் இரு சாமி ஏன் அவசரம் ஆமா நான் அழிந்து போனால் நீ எப்படி வாழ்வாய் நான் அழியவேண்டும் என்று தானே சர்ச்சில் பிரசங்கம் செய்கிறாய் நான் உயிறுடன் இருந்தால் தானே உனக்கு பொழப்பு அழிந்தால் உனக்கு வேலையே இல்லையே என்றது".

என்னுடைய கருத்து என்னவென்றால் ஒன்று இருந்தால் தான் ஒன்று வாழ முடியும் இல்லையென்றால் மற்றதுக்கு வாழ்வேது ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் வேண்டும். மலர் இருந்தால் தானே வாசம் வரும் கூடவே வண்டுகளும் வரும். எது புனிதம் என்கிறோமோ அதுவே அசிங்கமாக மனது நினைக்கிறதே..! இரண்டு நிலைய சரி சமமாக பாவிக்க முடியவில்லையே மனதுக்கு.? அன்ன லக்ஷ்மி, தான்னிய லக்ஷ்மி என்று சொல்ற உணவு தானே பின் மலமாக வெளியேறுகிறது பின் எப்படி அன்னலட்சுமி மல லக்ஷ்மி ஆனாள். இது தான் அது. அது தான் இது. "அண்டத்தில் உள்ளதே பிண்டம்" பெரியார் அவர் நிலையை அவர் தேர்தெடுத்தார். அவர் நிலையை நாம் எப்படி தேர்தெடுப்பது. அவருடைய கார்பன் காப்பியா நாம் எப்படி இருப்பது. அவருடிய முகமூடியை நாம் எப்படி அணிவது. பின் நம் முகம் எப்படி இருக்கும் நம்முடைய தேடுதல் எப்படிபட்டதாக இருக்கும்.

நாம் பார்க்கும் பொருள் யாவும் மனத்தின் வடிவமே......! மனமே உலகை ஆள்கிறது....!

நம் உலகில் எல்லாமே விரும்பகுடியதுதான் வெருக்கரதா இருந்தால் இயற்கை நமக்கு எதுவும் படைத்திருக்காது எல்லாமே ஏற்றுகொள்ளகுடியதுதான். அது அன்பை மட்டும் இல்லை வெறுப்பையும். பலபேர் சினிமாவில் சோகமான காட்சி வந்தாலே கண்ணீர் விட்டு அழுவாங்க அந்த காட்சியில் வரும் சோகம் தன்னை பற்றியதாக இருகிறதே என்ற நினைப்பு. அது படம் தான் அவை பொய் தான் என்று தெரியும் ஆனால் மனம் அதை உண்மை என நம்பி அழும். இப்படி பட்ட மனதுடன்தான் நாம் வாழ்கிறோம் பின் அது எடுக்கும் முடிவுகள் சரியானதாக இருக்குமா...?

மனசுடைய உணர்ச்சி வேகத்தில் உண்டாகும் அனுபவமே அறிவாக கொள்கிறோம்...மறுபடியும் அந்த உணர்வு ஏற்படும் போது அறிவு அதன் வேகத்தை கட்டுபடுத்துகிறது. ஆனால் பல நேரங்களில் கட்டுபடாமல்தான் போகிறது. இறுதியில் மனமே வெற்றிகொள்கிறது. இவற்றில் மனதுக்கு மந்திரம், ஜபம் வேற தனியாக செய்கிறார்கள் அவை ஒரு கட்டுபடுத்த ஒரு பயற்சி தான் அன்றி வேறல்ல ஓம் நாமோ நாராயண..! என்றுதான் சொல்ல வேண்டு என்றில்லை பெப்சி. கோகோ கோலா, என்று சொன்னால் கூட மனம் கட்டுப்படும்.என்ன வார்த்தைகள் என்று மனதுக்கு கூறுகிறோமோ அதைதான் ஏற்றுகொள்கிறது.

உடலும், மனமும் இருக்கும் போது மரணம் வருவதில்லை. மரணம் வரும் போது அவை இருப்பதில்லை. செத்த பிணத்தை நினைத்து சாகபோற பிணங்கள் அழுமாம் தானும் ஒரு நாள் சாகபோறோம் என்று அறியாமல். தூக்கம் என்பதும் தற்காலிக மரணம்...! யாருக்காவது தெரியுமா...? மரண ஞானம் ஒன்று உண்டு அது எப்போது வரும் எனபது யாருக்காவது தெரியுமா..? அவை மரணிக்கும் போது வரும். மரணத்தை நாம் பார்க்கும் போதும் வரும். அது தற்காலிமாக இருக்கும். பின் நாம் வீட்டிற்கு வந்தவுடன் அது போய்விடும்.

மறுபடியும் நாம் சுயநலம், பொறமை என்ற சுழல் உள்ள வாழ்க்கையில் மரணிக்கும் வரை முடிவில்லாமல் சுழல்வோம். இவ்வாறு இருக்கும் போது நம்மிடம் பெரு ஒளி(ஞானம்) வந்தவுடன் சிறுஒளி(மனம்) தேவையில்லாமல் போய்விடும். நாம் எப்படி தனிமையில வந்தமோ...அப்படியியே தனிமையில போகபோறோம். நடுவில் ஏன் இந்த ஆர்பாட்டம்....


இந்த நாளும், எந்த நாளும் இனிய நாளாக இருக்க அந்த இயற்கையை வணங்குவோம்...

என் எண்ணத்தின் எழுத்துகளை வரவேற்றதற்க்கு நன்றிகள் பல...!

ஏதோ ஒரு பாடத்தில் மட்டும் ஆர்வம் அதிகமாக இருப்பது ஏன்?

ஒரு குழந்தை கணக்கு பாடத்தில் ஆர்வம் அதிகம் கொண்டதாகவும் மொழி, வரலாறு போன்ற பாடங்களில் ஆர்வம் குறைந்தும் காணப்படும். இன்னொரு குழந்தை வரலாறு பாடத்தில் ஆர்வம் கொண்டதாகவும் பிற பாடங்களில் ஆர்வம் குறைந்தும் காணப்படும். இதற்கு காரணம் அவர்களின் நுண்ணறிவாகும்.

மனிதனின் நுண்ணறிவு பல கூறுகளால் ஆக்கப்பட்டது. நுண்ணறிவைப் பற்றிய உளவியல் கோட்பாடு ஒன்றின் படி நம் அனைவரின் நுண்ணறிவும் இரண்டு கூறுகளால் ஆக்கப்பட்டது என கொள்ளப்படுகிறது. வாழ்வதற்கு தேவையான அடிப்படை அறிவை வழங்கும் பொதுக் காரணி ஒன்றும், ஏதேனும் ஓர் சிறப்பு திறமைக்கு காரணமான சிறப்பு காரணி ஒன்றும் நம் நுண்ணறிவில் உள்ளது. இதன் படி பள்ளி சென்று படிப்பதற்கு தேவையான பொது நுண்ணறிவு காரணியும் அதோடு ஏதோ ஒரு பாடத்தில் சிறந்து விளங்கக் காரணமாக சிறப்பு காரணியும் எல்லா குழந்தைகளுக்கும் இருக்கும். அதன் காரணமாகவே எல்லா பாடங்களையும் படிப்பதோடு கணக்கு, அறிவியல் அல்லது மொழிப்பாடம் என ஏதோ ஒன்றில் மாணவர்கள் அதிக ஆர்வமும் தனித்திறமையும் பெற்று விளங்குகிறார்கள். சில குழந்தைகள் எந்த பாடத்திலும் ஆர்வமில்லாமல் ஒவியம், இசை, நடனம் சமூக சேவை என வேறு எதேனும் விஷயங்களில் ஆர்வம் கொண்டிருக்கலாம்.

குழந்தைகளின் ஆர்வத்தை கண்டறிய உளவியல் நாட்டச் சோதனைகள் பல உருவாக்கப்பட்டுள்ளன. இந்நாட்டச் சோதனைகள் குழந்தைகள் என்ன துறையில் அல்லது பாடத்தில் ஆர்வம் உள்ளவர்களாக விளங்குகிறார்கள் என்பதை கண்டறியும் திறன் படைத்தவை. அதைப் போன்ற நாட்டமுள்ள பாடங்களில் கவனம் செலுத்திப் படித்தால் பிற்காலத்தில் என்னென்ன பணிக்கு செல்லலாம் என்று தெரிந்து கொள்ள வசதியாக “பணி விவர அகராதிகளும்” உருவாக்கப்பட்டுள்ளன. வளர்ந்த நாடுகளில் தங்கள் குழந்தைகள் எட்டாம் வகுப்பு படிக்கும்போதே இச்சோதனைகளுக்கு அவர்களை உட்படுத்தி ஆர்வங்களை கண்டறிந்து விடுகிறார்கள் பின் அதற்கேற்ற படிப்புகளையும் வேலைகளையும் தேர்ந்தெடுக்க குழந்தைகளுக்கு பெற்றோர் உதவி செய்கிறார்கள்.

சிலர் நன்றாக நிறைய பேசும் இயல்பு கொண்டவர்களாக இருப்பர். அவர்கள் எந்த சூழ்நிலையில் இருந்தாலும் நாலு பேரிடம் பேசிக்கொண்டிருக்கவே விருப்பப்படுவர். பேசாமால் இருக்கச் சொன்னால் அவ்வாறிருக்க அவர்களால் முடியாது. அதைப் போன்றே பேசாமல் அமைதியாக இருக்கும் சுபாவம் கொண்டவர்களை கலகலவென பேச கட்டாயப்படுத்தினால் அது அவர்களால் முடியாது. இதைப் போன்றதே பொறியியல் துறைகளில் ஆர்வமில்லா ஒருவரை அத்துறை சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்து படிக்கச் சொல்லி கட்டாயப்படுத்துவதும்.
தற்போது பெற்றோர்கள் நாட்டில் என்ன துறையை எல்லோரும் தெர்ந்தெடுத்து படிக்கிறார்களோ அதே துறையை தம் குழந்தைகளையும் தேர்ந்தெடுத்து படிக்க வெண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். அவ்வாறு கட்டாயப்படுத்துவது முட்டாள்தனம். எந்த துறையை சார்ந்த படிப்பை தேர்ந்தெடுத்து படித்தாலும் அதில் முன்னேற வாய்ப்புகள் உள்ளன. அதை புரிந்து கொள்ளாமல் ஆர்வமில்லா குழந்தையை இலட்சக்கணக்கில் பணத்தை நன்கொடையாக கொடுத்து குறிப்பிட்ட பாடப்பிரிவில் சேர்த்து விட்டாலும் அவர்களால் அதில் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெற முடியாது. சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும்!.

குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருப்பது எப்படி?

குழந்தைகள் சில குணங்களை பிறப்பிலேயே மரபுத்தன்மைகளின் காரணமாக பெற்றிருக்கும். வளர வளர அக்குணங்கள் ஆளுமைப் பண்புகளாக உருவெடுக்கும். பிறப்பில் அமைந்த குணங்களை தவிர்த்து பிற நடத்தைகள் அனைத்தையும் குழந்தைகள் வளர வளர பிறைப் பார்த்து கற்றுக் கொள்கின்றனர். பெற்றோர், குடும்பத்திலுள்ள பிற உறுப்பினர்கள், குழந்தை வளரும் சூழ்நிலையில் உள்ள மற்றோர்களின் நடத்தைகளைப் பார்த்து குழந்தைகள் தன் நடத்தைகளை வடிவமைத்துக் கொள்கின்றனர்.

பார்த்துக் கற்றல் கோட்பாடு தற்கால உளவியலில் மிக முக்கியமான ஒன்றாகும். நம் நடத்தைகள் அனைத்தும் சமூக சூழலில் பிறரோடு ஏற்படும் தொடர்பின் மூலம் உருவானவை என்பதே இக்கோட்பாட்டின் மையக் கருத்தாகும். குழந்தை அப்பாவைப் போல நடப்பது, அம்மாவைப் போல சிரிப்பது, தாத்தாவைப் போல உட்காருவது, பாட்டியைப் போல் தூங்குவது ஆகியவை இக்கோட்பாடு உண்மை என்பதற்கு சில உதாரணங்கள். பிறரின் நடத்தையை பின்பற்றுவது குழந்தையின் வாழ்க்கையில் பிறந்து ஆறு வாரங்களுக்குப் பின் துவங்குகிறது. குழந்தை அம்மா சிரிப்பதைப் பார்த்து அதைப் போன்றே திருப்பி சிரிப்பது தான் முதல் பார்த்துக் கற்றுக்கொள்ளும் நடத்தை. ஏழு அல்லது எட்டு வயதிற்குள் அநேகமாக எல்லா நடத்தைகளையும் குழந்தை பிறரைப் பார்த்து கற்றுக் கொண்டு விடுகிறது. அதற்குப் பின்னர் குழந்தையின் எல்லா புதிய நடத்தைகளுக்கும் ஏழு அல்லது எட்டு வயதிற்குள் கற்றுக் கொண்ட நடத்தைகளே அடிப்படையாக அமையும். எனவே ஏழு அல்லது எட்டு வயது வரை குழந்தைகள் முன் மிகவும் எச்சரிக்கயாக நடந்து கொள்ள வேண்டும்.

பெரியவர்களைப் போலன்றி குழந்தைகள் கூர்ந்து கவனிக்கும் திறமை பெற்றவர்கள். எனவே அவர்கள் கவனிக்கவா போகிறார்கள் என்று அஜாக்கிரதையாக நடந்து கொள்வது கடும் பின் விளைவுகளை உண்டாக்கும் பேசும் போது நாம் பயன்படுத்தும் சொற்கள், பிறரிடம் பேசும் முறை, பிறரிடம் பேசும் விதம், உடையணியும் முறை, வீட்டிலும் வெளியிலும் சாப்பிடும் முறை போன்றவற்றை மிகுந்த கவனமுடன் தீர்மானித்து பெற்றோர்கள் தங்கள் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். இவ்விசயத்தில் அநேக பெற்றோர்கள் தவறிழைக்கின்றார்கள். உதாரணமாக

· இரட்டை வேடம் போடுதல்
· குழந்தைகள் முன் பிறரிடம் போய் பேசுதல்
· கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்துதல்
· குழந்தைகளுக்கு தெரியும் வகையில் சிறு சிறு திருட்டுகளில் ஈடுபடுதல்
· குழந்தைகள் முன்னிலையில் உறவினர் மற்றும் பிறறைப் பற்றி தவறாக விவாதித்தல்
· குழந்தைகள் முன்னிலையில் சுயநலமுடன் நடந்து கொள்ளல்
· குழந்தைகள் முன் சிகரெட் குடித்தல் மற்றும் பாலியல் சரசங்களில் ஈடுபடுதல்
· மனைவி-கணவன் தகறாறு செய்து கொள்ளல்
· மனைவி கணவனையும், கணவன் மனைவியையும் மரியாதை இன்றி நடத்துதல்

போன்றவைகள் குழந்தைகள் மனதில் நன்கு பதிந்து அவர்களும் அவ்வாறே நடந்து கொள்கிறார்கள்

மேலே குறிப்பிட்டவைகளை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆளுமை வெளிப்பாடு. பெற்றோர் எத்தகைய ஆளுமைகளை குழந்தைகள் முன் வெளிப்படுத்துகிறார்களோ அவ்வாறான ஆளுமையே குழந்தைகளுக்கும் அமையும். எடுத்துக்காட்டாக மிகவும் சிக்கலான சூழ்நிலை ஒன்றை சமாளிக்க இயலாமல் ஒரு தந்தை மனமுடைந்து போகிறார் என்றால் அவருடைய குழந்தையும் பிற்காலத்தில் அதைப் போன்றே கடும் சூழ்நிலைகளை சமாளிக்க இயலாமல் வருந்தும். எனவே எதையும் தாங்கும் இதயம் கொண்டவர்களாகவும், ஏற்று நடக்கும் மனப்பாங்கு உடையவர்களாகவும் நம்மை முதலில் மாற்றிக் கொண்டு பின் அவ்வாளுமையை குழந்தைகள் முன் வெளிப்படுத்துவது நன்று.

நாம் மட்டுமே முயன்று குழந்தைகளின் நடத்தையை முழுமையாக மாற்றியமைக்க இயலாது. எனவே நம்மைத் தவிர வேறு பலர் நல்ல பழக்கங்களை கொண்டவராக இருப்பதை நாம் அறிய நேரிட்டால் நம் குழந்தைகளுக்கும் அதைக் காண்பித்து “நீயும் அதைப் போன்று நடந்து கொள்வது விரும்பத்தக்கதாகும்” என்று கூறுவது நல்ல பயனை அளிக்கும். நாம் என்னதான் முயன்றாலும் நம்மால் கைவிடமுடியாத கெட்ட பழக்கங்கள் சில நம்மிடம் இருக்கலாம். அதை நம் குழந்தைகள் பின்பற்றும்போது “என்னால் கைவிட முடியாத இந்நடத்தையால் நான் துன்பமடைந்து கொண்டு இருக்கிறேன்.” நீ அதை பின்பற்ற வேண்டாம் என் நல்ல நடத்தைகளை மட்டும் நீ பின்பற்றினால் நான் மகிழ்ச்சி கொள்வேன் என்று வெளிப்படையாக குழந்தைகளிடம் கூறிவிட வேண்டும்.

ஒரு தாய் தன் அறிவுரையையும் கேட்காமல் அதிகமாக சர்க்கரை உண்ணும் தன் மகனை பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சரிடம் அழைத்துச் சென்று அதிக சர்க்கரை உண்பதை கைவிடுமாறு தன் குழந்தைக்கு அறிவுறுத்த வேண்டினார். அதைக் கேட்ட இராமகிருஷ்ணர் ஒரு வாரம் கழித்து குழந்தையை அழைத்து வருமாறு அப்பெண்மணியைக் கேட்டுக் கொண்டார். அவ்வாறே ஒரு வாரம் கழித்து அழைத்துச் செல்லப்பட்ட அப்பையனிடம் “சர்க்கரை அதிகமாக உண்பது உடலுக்கு கேடு, எனவே அதை விட்டுவிடு என்று இராமகிருஷ்ணர் அறிவுரை கூறினார். அதைக் கேட்ட அப்பையனின் தாய் இந்த அறிவுரையை சென்ற வாரமே நீங்கள் என் குழந்தைக்கு வழங்கியிருக்கலாமே சுவாமி? என்று பகவான் ஸ்ரீ இராமகிருஷ்ணரிடம் வினவினார். இராமகிருஷ்ணர் சென்ற வாரம் வரை நானும் அதிக சர்க்கரை உண்டு வந்தேன், நான் தவறு செய்து கொண்டு குழந்தைக்கு அறிவுரை கூறக் கூடாது. எனவேதான் என்னை முதலில் திருத்திக் கொண்டு என்னிடம் வந்தவரை திருந்துமாறு இப்போது கேட்டுக் கொள்கிறேன் என்று பதிலளித்தார். குழந்தைகளுக்கு நல்ல முன் மாதிரியாக இருப்பது என்பது இதைப் போன்று நாமும் உண்மையான நல்ல பழக்கங்களை கொண்டிருப்பது அல்லது உண்மையாகவே நம் தவறுகளை திருத்திக் கொள்வது என்பதுதான். மாறாக குழந்தைகளுக்குத் தெரியாமல் நீங்கள் தவறு செய்தால் அதை உணர்ந்து கொண்ட குழந்தை உங்களுக்குத் தெரியாமல் அதே தவறை செய்யும்.